பொதுமக்களுக்கு மத்திய நிதி அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

0
141

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் சண்டிகர் நகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாக்கெட் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு, போன்ற அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி விதித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டார். அதனடிப்படையில் இந்த புதிய வரி விதிகள் சென்ற 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

ஆனால் இதுவரை இல்லை ரெஜிஸ்டர் பிராண்டுகளுக்கு மட்டுமே 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி, பருப்பு, கோதுமை. உள்ளிட்ட தானியங்களுக்கும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் ஒரு கிலோ அரிசி 3 ரூபாய் வரையில் விலை உயர்ந்தது. அதோடு 1000 ரூபாய்க்குவிற்க்கப்பட்ட 25 கிலோ அரிசி 1,050 ரூபாயாகவும் விலை அதிகரித்தது.

மத்திய அரசின் இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அகில இந்திய அரிசியாலை சம்மேளனம், அகில இந்திய அனைத்து உணவு தானியங்களின் அமைப்புகளுடன் ஒன்று இணைந்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தியது.

இந்த சூழ்நிலையில், அரிசி, பருப்பு, உள்ளிட்ட தானியங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டி வரி தொடர்பாக தன்னுடைய வலைதள பதிவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்திருக்கிறார்.

அவர் பதிவிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது சில்லரை விற்பனையில் பைகளில் அடைக்கப்படாத தானியங்களுக்கும் ஜிஎஸ்டி கிடையாது. அவற்றிற்கு ஜிஎஸ்டி பொருந்தாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதோடு எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது என்பதை பட்டியலிட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அதனடிப்படையில் பருப்பு மற்றும் பருப்பு வகைகள், கோதுமை, கம்பு, ஓட்ஸ், மக்காச்சோளம், அரிசி, கோதுமை மாவு மற்றும் மைதா, ரவா கடலைமாவு, பொறி, தயிர். உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் தளர்வான மற்றும் பேக்கிங் செய்யப்படாத அல்லது லேபில் ஒட்டப்படாமல் விற்கப்படும் பொருட்களுக்கு எந்த விதமான ஜி எஸ் டி வரியும் விதிக்கப்படவில்லை என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது சில்லறையாக பைகளில் அடைக்கப்படாமல் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி பொருந்தாது. ஆனால் பாக்கெட் செய்யப்பட்டு அடைத்து விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Previous articleநீங்கள் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இதை நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleதொடரும் ஃபார்ம் அவுட்டுக்கு மத்தியில் விளம்பரத்தில் கோலி… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்