அஜித் ரசிகர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

0
33
vidaamuyarchi
vidaamuyarchi

அஜித் ரசிகர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

நடிகர் அஜித் அவர்கள் நடித்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படம் ஏராளமான வரவேற்பை பெற்ற திரைப்படமாகும்.இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்,மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ,நடிக்கவுள்ளதாக 8 மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியானது. அறிவிப்புகள் மட்டும் தான் வெளியாகின,ஆனால் அதற்கான படப்பிடிப்புகள் என எதுவும் தொடங்கப்படாமல் அப்படியே இருந்தன.

இந்த நிலையில் இந்த விடாமுயற்சி படப்பிடிப்பானது நாளை நடைபெறவுள்ளது எனவும், இந்த படப்பிடிப்பை இடைவெளி எதுவும் இல்லாமல்,தொடர்ந்து 3 மாதங்களுக்கு நடத்த,படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பானது அஜர்பைஜான் நாட்டில் துவங்க உள்ளதாகவும்,இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்  அவர்களை தேர்வு செய்துள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

author avatar
Jeevitha