மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தப்பட உள்ளது என முக்கிய முடிவுகள் குறித்து கணக்கீடுகள் தொடங்கியுள்ளன.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி என்பது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு எந்த அளவிற்கு உயருகிறதோ, இந்த முறையில் தான் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியும் உயரும் என தெரிவிக்கபட்டுள்ளது. அகவிலைப்படி என்பது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்படும் பணவீக்க அழுத்தத்தை ஈடு செய்யும் வகையில் அரசு ஊழியர்களுக்கு வாழ்க்கை செலவு சரி செய்தல் வழங்கப்படும் ஒன்றாகும்.
இது பணியாளர்களின் சம்பளத்தின் ஒரு அங்கமாகும் மற்றும் வாழ்க்கை செலவுக் குறியீட்டின் அடிப்படையிலானது. அந்த நிலையில் செப்டம்பர் மாதத்தின் பணவீக்க குறியீடு வெளியிட்டதன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் 2024 அறிக்கையின்படி அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு 0.07 புள்ளிகள் உயர்ந்து 143.3 புள்ளிகளாக உள்ளது.
ஜூலை மாதத்தில் பணவீக்க குறியீடு 142.7 புள்ளிகளாகவும் ஆகஸ்ட் மாதத்தில் 142.6 புள்ளிகளாகவும் இருந்தது. இதை வைத்து பார்த்தால் அரசின் அகவிலைப்படி 54% உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பில் இந்த 8வது ஊதிய குழு அமல்படுத்த இந்த மாதம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என கூறப்படுகிறது.