அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

High Court: அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு உரிய அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு உரிய அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அமலாக்கத்துறை என்பது இந்தியாவில் பண மோசடி தடுப்புச் சட்டம் மற்றும் பொருளாதார சட்டங்களை கண்காணிக்க மேற்கொள்ள முக்கிய நடவடிக்கைகளை எடுக்கும் பணியை கொண்டவர்கள்.

இவர்கள் முழுமையாக விசாரிக்காமல், எங்கள் மீது வழக்கு தொடர்கிறார்கள் என கூறி வந்துள்ளார்கள்.  இந்த வழக்கிற்கு முக்கிய காரணம் தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில் அமலாக்கத்துறை சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததை உரிய அனுமதி இல்லாமல் வழக்கு தொடர்ந்து என  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்தது.

அதை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை ரத்து செய்தது. ஏனெனில் குற்றவியல் நடைமுறை சட்டம் 171 ன் படி, “அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு செய்ய முன் பதிவு செய்ய வேண்டும்”  என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மீது அவரின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு வழக்கும் போடக்கூடாது என அறிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.