மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுகிறார்கள். அந்த திட்டம் அனைவருக்கும் இல்லாமல், ஒரு சில விதி முறைகள் இருந்தது. அது ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கும், வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், ஒரு வருடத்தில் 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படாது என அரசு அறிவித்தது.
அந்த நிலையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வழங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் தகுதி உள்ளவர்கள் சிலருக்கு இந்த உரிமைத் தொகை கிடைக்கவில்லை. இதனால் மேல் முறையீடு செய்தனர். அதன் விளைவாக ஒரு லட்சத்து 48,000 பேர் சேர்க்கப்பட்டார்கள். இந்த மாத அக்டோபர் நிலவரப்படி 16 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகிறார்கள்.
அதில் வேலூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள், மகளிர் உரிமை தொகை குடும்ப தலைவிகள் இடத்தில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டும் அல்லாமல் விரைவில் தகுதி உள்ள நபர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என கூறி உள்ளார்.
அந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் கிரிவலப்பாதையில் திரண்டு இருந்த பெண்களிடம் பேசும் போது, சில பகுதியில் பெரும்பாலான மக்களுக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை என மக்கள் கூறி இருந்தார்கள். அப்போது அவர் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, உங்களுக்கு உரிமை தொகை விரைவில் கிடைக்கும் என்றார்.