பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! மாதம் ரூ.3000 உதவித்தொகை!! அரசு வாக்குறுதி!!

Photo of author

By Jeevitha

Maharashtra: மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெண்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகையும் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித் தொகையும் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு உள்ளது.

மகாவிகாஸ் அகாடி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது,மகாராஷ்டிரா மாநிலத்தில் மஹாயுதி கூட்டணி என்ற ஆட்சி நடக்கிறது. அந்த ஆட்சியில் மக்கள் பலரும் பல நன்மைகளை பெற்று வருகின்றன. இந்த நிலையில் பாஜக சிவசேனா மற்றும் மஹாயுதி ஆட்சியில்  இணைய பல முயற்சிகளை மேற்கொண்டது. பிறகு சிவசேனா ஆட்சியில் பாஜக இணைந்தவுடன் பல சிக்கல்களை அந்த அரசு மேற்கொண்டது.

அபோது மகாராஷ்ட்ராவில் உள்ள மகாவிகாஸ் அகாடி தேர்தல் அறிக்கையில்  கட்சிகள் தனது தேர்தல் கொள்கைளை வெளியிட்டு உள்ளது. இந்த கொள்கைகளை மக்கள் இடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த தேர்தல் கொள்கைகளில் பெண்களுக்கு மாதம் ரூ.3000 அது மட்டும் அல்லாமல் இலவச பேருந்து பயணம் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை.

மேலும் விவசாய கடன் முறையை சரியாக செலுத்துபவர்களுக்கு  ஊக்கத்தொகையாக ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது மட்டும் ரூ.25 லட்சம் வரை சுகாதார காப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் ஆளும் மஹாயுதி கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை சுமார் ரூ.1500 -ல் இருந்து ரூ.2100 வரை உயர்த்தி தரப்படும் என தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.