புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு இனிய செய்தி! நாளைக்கே மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.1000!!

Photo of author

By Jeevitha

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக ரேசன் அட்டை வழங்கும் பணிகள் கூடிய விரைவில் நிறைவு செய்யப்படும். இதுநாள் வரையிலும் புதிய குடும்ப அட்டை வேண்டுமென்று 2.8 லட்சம் பேர் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் ஒவ்வொரு நாளும் புதிய குடும்ப அட்டைகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்களவைத் தேர்தல் நடைபெற்று வந்த காரணத்தினால்தான் புதிய ரேசன் கார்டு வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் புதிதாக குடும்ப அட்டை பெற்ற குடும்ப தலைவிகளுக்கு நாளை முதல் அவர்களது வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ. 1000 செலுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி மகளிரை மகிழ்ச்சிக்குள் ஆழ்த்தியுயள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை அடிப்படையில் ரேசன் அட்டை வைத்திருக்கும் குடும்பத் தலைவிகள் மாதந்தோரும் ரூ.1000 -ஐப் பெற சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அரசால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின் படி வேறு நிதிகளை அரசால் வங்கியில் ஒவ்வொரு மாதமும் பெறுமாயின் அவர்களுக்கு எப்போதும் மகளிர் உரிமை தொகை கிடைக்காது. ஓய்வூதியம் பெறும் பெண்களுக்கும் இது பொருந்தும்.

புதியதாக மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்க முடிவெடுத்திருந்தால் அடுத்த 4 மாதங்களுக்குப் பிறகு இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அப்போது இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1000 யானது 48,000 மகளிருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் சென்ற மாதமே மேல்முறையீடு செய்தவர்களுக்கு செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.