பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

Holidays: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர் மாதம் சில உள்ளூர் கோவில் திருவிழாக்களையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றால் ஒரே மகிழ்ச்சி தான். அந்த வகையில் அரசு கடந்த அக்டோபர் மாதம் தொடர் விடுமுறையால் மாணவர்கள் மிக மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் கடந்த மாத ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை தீபாவளி என பல நாட்கள் விடுமுறை கிடைத்தது. ஆனால் நவம்பர் மாதம் எந்த ஒரு அரசு விடுமுறை இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மிக வருத்தத்துடன் இருந்தார்கள்.

இந்த நிலையில் மாணவர்களுக்கு சந்தோஷமான விஷயமாக  தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் உள்ளிட்ட முக்கிய சிறப்பு தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையானது விடப்படுகிறது. இந்த விடுமுறையால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டும் அல்லாமல் அரசு ஊழியர்களும் மிக சந்தோஷத்தில் உள்ளார்கள்.

அந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  கந்த சஷ்டி திருவிழாவையொட்டி  முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதே போல திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழா நவம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டும் அல்லாமல் மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுக தீர்த்தவாரி விழாவினை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு எதிர்வரும் 15.11.2024 வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 23.11.2024 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.