Holiday: மாணவர்களுக்கு குட் நியூஸ்! தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!!

Photo of author

By Jeevitha

TENKASI DISTRICT: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை அளிப்பதாக தென்காசி மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

சில பள்ளிகளில் தொடர்ந்து நான்கு நாட்கள் இந்தியா சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது மேலும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தென்காசி மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் அவர்கள் ஆகஸ்டு 23 ஆம்(வெள்ளிகிழமை) நாளன்றும் விடுமுறை என்று அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் வருகின்ற ஆகஸ்டு 23 ஆம் நாள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி அந்நாளன்று தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேலைநாளினை ஈடு செய்யும் பொருட்டு  செப்டம்பர் 21 ஆம் நாள்(சனிக்கிழமை) அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக செயல்படும்  என்று அம்மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அவர்கள் கூறியுள்ளார்.

ஆகஸ்டு 23 ஆம் நாளன்று ஏதேனும் அரசு தேர்வுகள் நடைபெற இருந்தால் தேர்வு எழுதுபவர்களுக்கும் தேர்வுக்காக பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது என்று கூறியுள்ளார். தென்காசி மாவட்டத்தின் கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் அவசரப் பணிகளை கவனிக்க குறைந்த அளவிலான ஊழியர்களைக் கொண்டு செயல்படுமென்றும் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாதெனவும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அவர்கள் அறிவித்துள்ளார்.