மாணவர்களுக்கு குட் நியூஸ்!! இனி அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இது அமல்!!
தமிழக அரசு, பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஏழை மற்றும் வறுமையின்மையின் காரணமாக பல மாணவர்கள் காலை உணவினை சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதால்,அவர்களால் சரியாக வகுப்பினை கவனிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படுவதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்துள்னர்.இதனால் கற்றல் திறன் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு இந்திய மாநிலங்கள் அனைத்தும் வியந்து பார்க்கும் திட்டம் ஒன்றை தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்தார்.அது தான், “முதல்வரின் காலை உணவு உணவு திட்டம்”,அதன்படிஅரசு பள்ளிகளில் 1 முதல 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகளிலேயே காலை நேர உணவு வழங்கப்பட்டது.இதில் நாள்தோறும் தனித்தனியாக உணவு பட்டியல் தயாரிக்கப்பட்டு சாப்பாடு கொடுக்கப்படுகிறது.அதில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் என சத்து மிகுந்த உணவுகள் அதிகம் இடம் பெற்றுள்ளன.
இந்த திட்டத்திற்க்கு,தற்பொழுது நடைபெறும் 2024-2025-ம் காலண்டில் 2 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தால் மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கற்றல் திறன் அதிகளவில் மேம்பட்டது.இத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டம் அரசு பள்ளிகளில் மட்டுமே இருந்தது.இதனை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
எனவே இந்த திட்டம் தற்பொழுது அரசு உதவி பெறும் பள்ளிக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.அந்த வகையில் வரும் ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் மாவட்டதில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் இந்த திட்டம் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.