ஆசிரியர்களுக்கு குஷியான செய்தி!! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

ஒரு மாணவன் சிறந்த இடத்திற்கு சென்றால் அதற்கு முக்கிய காரணம் ஆசிரியர்கள். அவர்களுக்கு நம் தமிழக அரசு பணியிட மாறுதல் பற்றி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் மாணவர்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. இலவச புத்தகம், மிதிவண்டி, மதிய உணவு மற்றும் காலை உணவு என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆசிரியர்கள் பணியே அறப்பணி என்றும் கூறுவார்கள். அவர்கள் நீண்ட நாட்களாக அரசிடம் பணியிட மாறுதல் பற்றி பல கோரிக்கைகள் எழுந்தன.

அதற்கு முக்கிய காரணம் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆரிசியர்கள் தனது சொந்த ஊர்களில் வேலை கிடைக்காமல் வெளியூரில் இருந்து பணி செய்வதற்கு பலர் வந்தனர். நாம் எப்போது நமது சொந்த ஊருக்கு சென்று பணியாற்றலாம் என பலரும் தங்கள் மனதில் நினைத்து வந்தார்கள்.

அதனை தொடர்ந்து உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் வரும் அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ஆரியர்கள் அனைவருக்கும் உயர்கல்வித் துறை பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு இணைய வழியாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் இணைய வழியாக  பெறப்படும் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு பணியிட மாறுதலுக்கான அறிவிப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 2024-25 ஆம் ஆண்டிற்கான பொது கலந்தாய்வு 25.11.2024-க்குள் நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக ஆசிரியர்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியில் உள்ளார்கள்.