மாற்றுத் திறனாளிகளுக்கு குட் நியூஸ் சொன்ன இந்து சமய அறநிலையத்துறை!

0
215

திருக்கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக புத்தாடைகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

திருக்கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் திருமணம் செய்யும் மணமக்களின் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கோவில் மண்டபங்களில் வாடகையின்றி திருமணம் நடத்த ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல திருக்கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக புத்தாடைகள் வழங்கப்படும் என மானிய கோரிக்கை விவாதத்தில் போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதனை செயல்படுத்துவதற்கான உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியை திருக்கோவில்களின் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யுமாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇனி உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் இல்லை! உலக சுகாதார நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
Next articleகிடுக்குப்பிடி போட்ட தாழ்த்தப்பட்டோர் ஆணையம்? தப்பிப்பாரா ராஜகண்ணப்பன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here