தமிழகத்தில் ஏரிகளிலும், குளங்களிலும், படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி க்கொண்டு மண்வளத்தை அதிகப்படுத்துவதற்கான ஒரு அறிவிப்பை கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
இதனை செயல்படுத்தும் விதத்தில் தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டிருக்கிறது. அதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஏறி மற்றும் குளங்களில் இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
நஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 185 கன மீட்டர் வண்டல் மண்ணும் ஏரி மற்றும் குளங்களிலிருந்து 2 வருடங்களுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று விவசாயிகள் இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு சம்பந்தப்பட்ட வேளாண் நிலங்களுக்கான சிட்டா அல்லது அடங்கல் நகல் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 நாட்களுக்கு குறையாமல் ஏரி மற்றும் குளங்களிலிருந்து நிர்ணயத்த அளவில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களின் பயன்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்காக மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்பட வேண்டும் இதற்கு சுற்றுச்சூழல் துறையின் சான்றிதழ் பெறுவதற்கான தேவை இல்லை என்று கூறியிருக்கிறார் முதல்வர்.
விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களின் பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதற்கு விதி எண் 12(2)ன் கீழ் அனுமதி வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியளர்களுக்கும் போதுமான அறிவுரை அரசால் வழங்கப்பட்டிருக்கின்றன.
அதோடு ஏரி மற்றும் குளங்களிலிருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்து அதனை பயன்படுத்தி விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காக மற்றும் அதன் திறனை அதிகரிக்கும் விதமாக விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கின்றன என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.