டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

TNPSC Exam: டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. தேர்வர்களுக்கு தேர்வு குறித்து  உடனடியாக தகவல் தெரிவிக்க டெலிகிராம் சேனல் தொடங்கியுள்ளது.

ஒவ்வொருவருக்கும் அரசு வேலை பெற வேண்டும் என்ற கனவு கட்டாயம் இருக்கும். இந்த நிலையில் அனைவரும் முதலில் தேர்வு செய்யப்படுவது குரூப்-4 தேர்வு முறையை தான். ஆனால் அதை தவிர நிறைய அரசு தேர்வுகள் இருப்பது யாருடைய கண்ணுக்கும் தெரிவதில்லை. நிறைய பேர் குரூப்-4 தேர்வுக்கு மட்டும் தயாராகி வருகின்றனர். ஆனால் தேர்வர்களுக்கு இந்த தேர்வுகள் பற்றி எந்த ஒரு விவரமும் தெரிவதில்லை.

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

அதனால் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வர்களுக்கு உடனடியாக தகவல்களை தெரிவிக்க https://t.me/TNPSC_Office என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. இதில் தேர்வர்கள் இந்த இணைப்பை கிளிக் செய்து டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த இணையத்தில் தேர்வுகள் எப்போது, அதற்கான முடிவுகள், காலிப் பணியிடங்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பற்றிய அனைத்து விவரங்களும் அதில் அறிந்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்த அரசு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் பலர் பயனடைந்து வருகிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் குறைந்த காலி பணியிடங்கள் தான் உள்ளது. இருந்தபோதிலும் அப்படியாவது அரசு பணி வாங்க வேண்டும் என நினைத்து லட்ச கணக்கில் அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள். மேலும் இந்த டெலிகிராம் சேனல் மூலம் தேர்வர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.