குட் நியூஸ்!! இனி வெளிநாடுகள் செல்ல விசா தேவையில்லை! மத்திய அரசு அதிரடி!

Photo of author

By Pavithra

குட் நியூஸ்!! இனி வெளிநாடுகள் செல்ல விசா தேவையில்லை! மத்திய அரசு அதிரடி!

இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் விசா தொடர்பாக நேற்று ராஜ்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் அவர்கள் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: சாதாரண பாஸ்போர்ட் வைத்துள்ள இந்திய குடிமக்கள் கீழ்கண்ட 16 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்றும் மேலும் இ-விசா பற்றியும், விசா வருகை பற்றியும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

விசா இல்லாமல் பயணிக்கும் நாடுகள்:

நேபாளம்,சமோவா,செனகல்,
மாலத்தீவுகள்,மொன்செராட்,
பார்படாஸ், பூட்டான், டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங் எஸ்.ஏ.ஆர், மொரீஷியஸ், நியுதீவு,செர்பியா மற்றும் டிரினிடாட்,செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தோனேசியா ஈரான் மியான்மர் உள்ளிட்ட 43 நாடுகள் இந்தியா பயணிகளுக்கு
விசா-ஆன்-வருகை வசதியை வழங்குகின்றது.மேலும் இந்திய பயணிகளுக்கு,மலேசியா, இலங்கை,நியூசிலாந்து உள்ளிட்ட 36 நாடுகளில் இ-விசா வசதியும்
வழங்கப்படுகின்றது.
இந்தியர்களுக்கான சர்வதேச பயணத்தை மென்மேலும் எளிதாக்கும் வகையில் விசா இல்லாத பயணம்,விசா- ஆன் – வருகை மற்றும் இ-விசா வசதிகளை வழங்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசுக கடும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக வெளியுறவு துறை அமைச்சர் முரளிதரன் அவர்கள் கூறியுள்ளார்.