இந்தியாவில் மெல்ல மெல்ல குறையும் நோய்தொற்று! மகிழ்ச்சியில் மக்கள்!

Photo of author

By Sakthi

நோய்த் தொற்று பாதிப்பு நாட்டில் முன்பை விட சற்றே குறைந்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதற்கு காரணமாக தெரிவிக்கப்படுவது வடமாநிலங்கள் அதிக பாதிப்பை சந்தித்து தற்போது அதிலிருந்து மேல தொடங்கியிருக்கின்றன. ஒரே நாளில் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 591 பேருக்கு இந்த நோய் தோற்று புதிதாக கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மொத்தம் 4 ஆயிரத்து 209 பேர் இந்த நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள் பாதிப்பு குறைந்தாலும் கூட பலியின் எண்ணிக்கை குறைவது போல் தெரியவில்லை. இதுவரையில் இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 331 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்த நோய் தொற்றிலிருந்து நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 295 பேர் குணமாகி வீடு திரும்பி இருக்கிறார்கள். இதன் காரணமாக, இந்த நோய் தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரத்து 735 ஆக அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 30 லட்சத்து 27 ஆயிரத்து 925 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், நம்முடைய நாட்டில் இதுவரையில் 19 கோடியே 18 லட்சத்து 29 ஆயிரத்து 591 பேருக்கு இந்த நோய் தொற்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு வரையில் நாள்தோறும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சூழலில் தற்சமயம் இந்த தொற்றின் எண்ணிக்கை குறைந்திருப்பது சற்று நிம்மதி தரும் விஷயமாக இருந்து வருகிறது. அதேவேளையில் இந்த நோய்த்தொற்று இந்தியாவை விட்டு முழுவதுமாக எப்பொழுது ஒழிக்கப்படும் என்பதே தற்சமயம் சாதாரண மனிதன் முதல் பெரிய பெரிய ஆட்கள் வரையில் இருந்து வரும் ஒரே விதமான எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது.