உங்கள் குறைகளை சொல்ல நல்ல வாய்ப்பு!! நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம்!!  

Photo of author

By Sakthi

உங்கள் குறைகளை சொல்ல நல்ல வாய்ப்பு!! நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம்!!
நாளை(ஜூலை13) தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. எனவே அனைவரும் மறக்காமல் கலந்து கொண்டு தங்கள் குறைகளை புகார்களை தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்கள் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ரேஷன் கடைகளில் சரியாக கிடைத்துக் கொண்டிருந்த பருப்பும் பாமாயிலும் கடந்த இரண்டு மாதங்களாக மக்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியாத பட்சத்தில் நாளை(ஜூலை13) ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
ரேஷன் கார்டுகளில் உள்ள திருத்தங்கள், ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக கிடைக்காததது, ரேஷன் கடைகளில் உள்ள இருப்பு குறித்து விவரங்கள் தெரியாமல் அல்லது தெரிவிக்காமல் இருப்பது, தங்களுடைய ரேஷன் கடைகளை மாற்றிக் கொள்வது போன்ற அனைத்து குறைகளையும் தீர்க்க இந்த குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
நாளை அதாவது ஜூலை 13ம் தேதி தமிழகம் முழுவதும் இந்த குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. நாளை(ஜூலை13) காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.
இந்த முகாமில் ரேஷன் கார்டுகள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் செய்வது உள்பட பல சேவைகள் செய்யப்படவுள்ளது. எனவே ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்கள் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.