GOOGLE SEARCH: கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு 2024 இந்தியர்கள் அதிகம் இணையத்தில் தேடியவைகள் குறைத்து தகவல் வெளியிட்டு இருக்கிறது.
கூகுள் என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் உள் உலகத்தை அடைத்து விடலாம். என்ற அளவிற்கு கூகுள் இணையத்தில் தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை. நாம் அனைவரும் ஒரு முறையாவது கூகுள் சேவையை நாடி இருப்போதும் அந்த வகையில் இந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு இந்தியர்கள் இணையத்தில் அதிகம் தேடிவைகள் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் இந்தியர்கள் அதிக அளவில் தேடிய முதல் பத்து திரைப்படங்கள் 1.ஸ்திரீ 2 ,2.கல்கி 2898 AD, 3.12th ஃபெயில், 4.லபாடா லேடீஸ், 5.ஹனுமன், 6.மஹாராஜா, 7.மஞ்சும்மல் பாய்ஸ், 8.தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம், 9.சலார்,10.ஆவேஷம் இப் படங்கள் இருக்கிறது. அதிகம் தேடப்பட்ட வேப்சீரிஸ்களாக ஹீராமண்டி,மிர்சாபூர்,லாஸ்ட் ஆஃப் அஸ்,பிக்பாஸ் 17,பஞ்சாயத்,க்வீன் ஆஃப் டியர்ஸ்,மேரி மை ஹஸ்பண்ட்,கோடா ஃபேக்டரி,பிக்பாஸ் 18,3 பாடி பிராப்ளம் இவைகள் இருக்கிறது.
மேலும் அதிகம் தேடப்பட்ட தனி நபர்களாக வினேஷ் போகத்,நிதிஷ் குமார்,சிராக் பஷ்வான்,ஹர்திக் பாண்ட்யா,பவன் கல்யாண்,ஷஷாங்க் சிங்,பூனம் பாண்டே,ராதிகா மெர்ச்சண்ட்,அபிஷேக் சர்மா,லக்ஷயா சென் இவர்கள் இருக்கிறார்கள். மேலும் அதிகம் தேடப்பட உணவுப்போருட்களாக பார்ன் ஸ்டார் மார்டினி,மாங்காய் ஊறுகாய்,தனியா பஞ்சரி,உகாதி பச்சடி,சர்னாம்ரிட்,எமா தட்சி,ஃபிளாட் வைட்,கஞ்சி,ஷங்கர்பலி,சம்மந்தி போன்றவைகள் இருக்கிறது.
மேலும், இந்தியர்கள் பொதுவாக அதிகம் தேடையவைகளாக இந்தியன் பிரீமியர் லீக்,T20 உலகக் கோப்பை, பாரதிய ஜனதா கட்சி ,தேர்தல் முடிவுகள் 2024 , ஒலிம்பிக்ஸ் 2024 , அதிகப்படியான வெப்பம் , ரத்தன் டாடா , இந்திய தேசிய காங்கிரஸ், ப்ரோ கபாடி லீக், இந்தியன் சூப்பர் லீக் போன்றவைகள் இருக்கிறது.