இந்தியாவில் கூகுள் செய்த அதிரடி நடவடிக்கை !
நாட்டில் நடைபெறும் குற்றங்களில் பல்வேறு குற்றங்கள் இணையத்தில் தேடுவதின் மூலம் தெரிந்து கொள்ளப்படுகிறது என்ற குற்றசாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு அனைத்து சமூக வலைதளங்களுக்கும் தகவல் தொழில் நுட்ப கொள்கைகளுக்கு உட்பட்டு வெளிப்படை தன்மையோடு செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வெளியிட்டது. தற்போது இந்த விதிகளுக்கு உடன்படுவதாக மே 25-ந் தேதிக்குள் சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவற்றுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அப்படி, ஏதேனும் புகார் வந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விதிகளில் கூறப்பட்டது. நிலையில், விதிகளை மீறும் பட்சத்தில் அதற்கான பொறுப்பு முழுவதும் அந்த இணையங்களையே சாரும் என்றும் சொல்லப்பட்டது. மேலும் கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகிய நிறுவனங்கள் புதிய விதிகளுக்கு இணங்கி செயல்பட சம்மதம் தெரிவித்துள்ளன.
கூகுள் நிறுவனத்தின் முதல் மாத வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, இந்தியாவில் தனிப்பட்ட பயனர்களிடமிருந்து 27,700 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் கூகுள் தனது சமூக ஊடக தளங்களில் இருந்து சுமார் 59,350 உள்ளடக்கங்களை நீக்கி உள்ளது.
அப்படி பெறப்பட்ட புகார்களில் சுமார் 96 சதவீதம் பதிப்புரிமை தொடர்பான பிரச்சினைகளும், அதைத் தொடர்ந்து வர்த்தக முத்திரை தொடர்பாக 1.3சதவீதமும், அவதூறு தொடர்பாக 1சதவீதமும், சட்டம் தொடர்பாக 1சதவீதமும் மற்றும் போலியானவை தொடர்பாக 0.4 சதவீதமும் மற்றும் சூழ்ச்சி தொடர்பாக 0.1 சதவீதமும் ஆகும் என்று கூறப்படுகிறது.
இது குறித்த மின்னஞ்சல் அறிக்கையில், கூகிள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும் போது உலகெங்கிலும் இருந்து பெறும் பல்வேறு வகையான கோரிக்கைகள் மற்றும் அதற்கு எவ்வாறு பதிலளிக்கப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மையை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் 2010 முதல் நிறுவனத்தின் தற்போதைய வெளிப்படைத்தன்மை அறிக்கையில் கண்காணிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி மாதாந்திர வெளிப்படைத்தன்மை அறிக்கையை நாங்கள் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும், மேலும் இந்தியாவுக்கான எங்கள் அறிக்கை செயல்முறைகளை நாங்கள் செம்மைப்படுத்துவதால் மேலும் விவரங்களை தொடர்ந்து வெளியிடுவோம் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.