சிறிய தவறால் பெரிய கோப்பையை இழந்த பாகிஸ்தான் அணி!

Photo of author

By Sakthi

கடந்த 2007ஆம் வருடம் நடந்த ஐசிசி முதல் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

14 ஆண்டுகளுக்கு முன்னர் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியை சார்ந்தவர்கள் தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் முதலில் இந்தியாவின் பக்கம் ஆட்டம் இருந்த சூழ்நிலையில், மிஸ்பா உல் ஹாக் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணிக்கு சற்று சறுக்கல் உண்டானது.

ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றியின் அருகில் சென்றுவிட்டது இதற்கான காரணமாக, இருந்தவர் மிஸ்பா ஆனாலும் அவருடைய தவறான ஆட்டத்தின் மூலமாக தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து அதன் காரணமாக, இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. அந்த போட்டியில் அவர் 38 பந்துகளை சந்தித்து 4 சிக்சர்களுடன் 43 ரன்களை சேர்த்திருந்தார். இந்த போட்டி தொடர்பாகவும், அவருடைய கடைசி பந்து விக்கெட்டானது தொடர்பாகவும், மிஸ்பா தற்சமயம் நினைவுகூர்ந்து இருக்கிறார்.

அவர் தெரிவித்ததாவது, நான் என்னுடைய ஆட்ட திறனில் அதிக நம்பிக்கை வைத்திருந்தேன், அதிலும் குறிப்பாக ஸ்கூப் ஷாட்டை விளையாடுவதில் சிறந்து விளங்கினேன். அந்தத் தொடர் முழுவதும் இதுபோன்ற ஷாட் காரணமாக, பவுண்டரிகளை அடித்ததன் காரணமாகவே, நான் அந்த ஷாட்டை ஆட முயற்சி செய்தேன், ஆனால் எதிர்பாராதவிதமாக அது என்னுடைய விக்கெட்டை இழக்க வைத்தது, நான் மிகவும் நம்பிக்கையுடன் அந்த ஷாட்டை தவறாக அடித்து விட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார்.