நயன்தாராவும் சிம்புவும் நடிப்பது சாத்தியமா?

Photo of author

By Sakthi

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் சிம்பு ஆகியோர்களின் கூட்டணி எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக தான் இருந்து வருகிறது அதற்கு காரணம் 2010ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் தான் காரணம் என்று கூறுகிறார்கள் .அதன்பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது தான் என்றும் தெரிவிக்கிறார்கள்.

தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் கூட நடிகை திரிஷாவும் சிம்புவும் இணைந்து நடித்த கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் இணையத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு கௌதம் கார்த்திக் ஆகியோர் ஒன்றிணைந்து நடிக்கும் 10 தல என்ற திரைப்படத்தில் கூட சிம்புவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடித்திருக்கின்றார். இந்தநிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

இந்த அறிவிப்பானது ரசிகர்களுக்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஐசரி கணேஷ் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாக இருக்கிறது ஆனாலும் இதுவரையில் வெளியிடப்படாத தகவல் என்னவென்று கேட்டால் ,சிம்புவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் சிம்புவுக்கு கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று கேட்டால் வாய்ப்பு இருக்கிறது என்று தெரியவருகிறது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் இரு திரைப்படங்கள் நடிப்பதற்கு முன்னரே நயன்தாரா ஒப்பந்தமாகியிருக்கிறார். எனவே வி டிவி நிறுவனம் தயார் செய்யும் சிம்பு திரைப்படத்தில் இது சாத்தியப்படலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

முன்னரே வல்லவன் மற்றும் இது நம்ம ஆளு போன்ற திரைப்படங்களில் சிம்புவும் நயன்தாராவும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்தால் சிம்பு மற்றும் நயன்தாரா ஒன்றிணைந்து நடிக்கும் மூன்றாவது திரைப்படமாக இது இருக்கும். அதோடு அடுத்தடுத்து திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார் நயன்தாரா அதில் குறிப்பிடத்தக்கது நெற்றிக்கண் என்ற திரைப்படம் வெளியாவதற்கு தயாராக இருப்பதுதான் என்று சொல்கிறார்கள்.