எல். முருகனின் ஆளுநர் சந்திப்பில் நடந்தது என்ன! டெல்லிக்கு பறந்த ஆளுநர்!

Photo of author

By Sakthi

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் திடீரென விமானத்தின் மூலம் சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார்.

அங்கே குடியரசுத் தலைவர், மற்றும் பிரதமர் உள்துறை அமைச்சர், ஆகியோரை ஆளுநர் சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் இன்று காலை சந்தித்து இருக்கிறார்.

அந்த சந்திப்பின்போது, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் வாங்கியதற்காக, நன்றியினை தெரிவித்து இருக்கின்றார்.

அதோடு தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற வேல் யாத்திரை மற்றும் எதிர்கட்சிகள் செயல்பாடுகள் போன்றவற்றை பற்றியும் கலந்து ஆலோசித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், திடீரென ஆளுநர் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலமாக டெல்லி சென்று இருக்கின்றார். அங்கே இன்று மாலை பிரதமர் மோடியை அவர் சந்திக்க இருக்கிறார்.