தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருக்கிறார் தில்லி சென்ற அவர் பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களையும் சந்தித்து பேசியதாக தெரிகிறது.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் பேசுகையில், தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் சம்பந்தமாக ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருக்கின்றது.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிந்தையும் சந்தித்து பேசி இருக்கின்றார். நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களையும் சந்திக்க உள்ளார் . அதன் பிறகு சென்னை திரும்புகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.