ஆளுநரை எச்சரிக்கை செய்த ஆர். எஸ். பாரதி!

Photo of author

By Sakthi

புகார்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக அறிவித்திருக்கின்றது சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளுங்கட்சிக்கு எதிரான 97 பக்கங்கள் கொண்ட ஒரு ஊழல் புகாரை அளித்திருக்கின்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு உளப்பட எட்டு மந்திரிகள் மீதும் ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்திருக்கின்றார் ஸ்டாலின். 2018ஆம் வருடம் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிறை நிறுத்தவேண்டும் என்று ஸ்டாலின் ஆளுநரை வலியுறுத்தி இருக்கின்றார். ஆனாலும் திமுக ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருப்பதாக முதல்வர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகின்றது.

இதுபோன்ற சூழ்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் உரையாற்றிய அந்தக் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி ஜெயலலிதா மீதும் தலைவர் கலைஞர் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக புகார் கொடுத்தார். அதன் பின்பு ஜெயலலிதா தண்டனை அடைந்தார் அதே விதமாக தான் முதல்வர் உட்பட மந்திரிகளுக்கு எதிரான முதல்கட்டமாக 97 பக்கங்களை கொண்ட ஒரு ஊழல் புகார் கொடுக்க பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

முதல்வர் உடைய உறவினர்களுக்கு கொடுத்த 19 சொத்துக்கள் பினாமி பெயரில் வாங்கி சேர்த்திருக்கிறார்கள் அனைத்து ஆவணங்களையும் கொண்ட ஆதாரம் இருக்கின்றது. இந்த குற்றத்திற்காக நான்கு முதல் ஏழு வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என்று தெரிவித்தார் ஆர். எஸ். பாரதி ஆளுநரிடம் அனைத்துவிதமான ஆதாரங்களையும் கொடுத்திருக்கின்றோம்.17 ஏ சட்டப் பிரிவின்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம் அதற்க்கான அதிகாரம் அவருக்கு இருக்கின்றது. ஆளுநர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால், நீதிமன்றத்தை திமுக நிச்சயமாக நீதிமன்றத்தை நாடும் என்று தெரிவித்திருக்கின்றார் ஆர். எஸ். பாரதி