அரசின் அதிரடி!! 2k கிட்ஸ்-க்கு ஆப்பு!! Youtube Insta பயன்படுத்த தடை!! 

Photo of author

By Jeevitha

உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன்களின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாம் போன்களுக்கு அடிமையாகுவது இல்லை. ஸ்மார்ட் போன்கள் தான் நம் அனைவரையும் அடிமையாக்குகிறது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் வந்த பிறகே. அப்போது தான் மக்கள் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் முறை அதிகமாக பரவியது.

இது மட்டும் அல்லாமல் அரசு பலவகையான டிஜிட்டல் முறையில் செயல்படுத்தி வருகிறது. இதனால் பண பரிவர்த்தனைகள் கூட வங்கிகளுக்கு செல்லாமல் மிக சுலபமாக ஒரே நிமிடத்தில் மற்றவர்களுக்கு வழங்க முடியும். மேலும் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. இதனால் பெற்றோர்கள் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி தர வேண்டிய கட்டாயம் இருந்தது.

அதனால் பெற்றோர்களும் வேறு வழி இல்லாமல் கல்விக்காக பயன்படுத்த வாங்கி கொடுத்தனர். ஆனால் மாணவர்கள் கல்வியை மட்டும் மனதில் வைத்து படிக்காமல் அதையும் தாண்டி Instagram,Facebook,Youtube,TikTok,twitter என அனைத்து சமூகவலைதளங்கலை பயன்படுத்தி அதற்கு அடிமையாகி உள்ளார்கள் என அனைவரும் கூறி இருந்தார்கள்.

இதனை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை என அமல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த பெற்றோர்களின் அனுமதி இருந்தாலும் பயன்படுத்த முடியாத நிலை வரும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்கள் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிக தீங்கு விளைவிக்கும் என இந்த முடிவை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் எடுத்திருக்கிறார்.