பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.. உடனே விடுமுறை எடுத்துக்கோங்க!!

0
15
government-announcement-students-should-not-come-to-school-if-they-have-a-fever
government-announcement-students-should-not-come-to-school-if-they-have-a-fever

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து காணப்பட்ட நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்டு கொரோனா பரவலை படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தற்போது தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகின்றது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் என்பது அதிகரித்து காணப்படும் நிலையில் தொற்று பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு பொதுமக்களுக்கு ஒரு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதனை பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. மாணவர்களின் உடல் நிலையை கண்காணிக்க வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் மூலமாக மற்ற மாணவர்களுக்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு இருப்பதால் காய்ச்சல் உள்ள மாணவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். பள்ளி மாணவர்கள் காய்ச்சல் மற்றும் பிற பிரச்சனைகளும் பள்ளிக்கு வரும் நிலையில் உடனே ஆசிரியர்கள் கண்காணித்து அறிவுரை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Previous articleஅவர்கள் விட மாட்டார்கள்.. ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை – திருமா பரபர பேட்டி!!
Next articleகலைஞர் மகளிர் உரிமைத்தகைக்கு இன்னும் விண்ணப்பிக்கலையா; அரசு சொன்ன அப்டேட் இதோ!!