அரசின் அட்டகாசமான அறிவிப்பு!! சூப்பர் சான்ஸ்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Jeevitha

 

Chennai: சென்னையில் உள்ள பாரம்பரிய கட்டங்களில் ஒன்றான ரிப்பன் மாளிகை மற்றும் வளாகத்தை பார்வையிட விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள ரிப்பன் மாளிகையில் தான் அனைத்து முக்கிய அலுவல் சார்ந்த பணிகள் நடைபெறும். இந்த பழமை வாய்ந்த ரிப்பன் மாளிகை சுமார் 111 ஆண்டுகள் பழமையானது. இந்த மாளிகையை பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாளிகையை பார்வையிட கல்வி சுற்றுலா மூலமாகவோ அல்லது தனிநபராகவோ அது மட்டும் அல்லாமல் கல்லூரிகள் மூலமாகவோ யார் வேண்டுமானாலும் வரலாம் என அரசு அறிவித்துள்ளது.

அதை விண்ணப்பிக்க [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 94451 90856 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கான முக்கிய நோக்கம் ரிப்பன் மாளிகையின் கட்டுமானம் மற்றும் அவற்றின் வரலாறு போன்றவை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்தின் உயரம் சுமார் 8.2 அடியாகும்.

மேலும் இந்த மாளிகையை கட்ட சுமார் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் செலவில் லோகநாத முதலியார் கட்டிக் கொடுத்தார். இந்த மாளிகை சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் 279அடி நீளமும் 105 அடி அகலமும் 141 அடி உயரமும் கொண்டது. இந்த ரிப்பன் மாளிகை 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி சென்னையில் செயல்பட தொடங்கியது.