ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்!!தமிழக முதல்வர் அறிவிப்பு

Photo of author

By Pavithra

ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்!!தமிழக முதல்வர் அறிவிப்பு

Pavithra

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஐந்தாம் மற்றும் ஆறாம் கட்ட ஒரு இடங்களில் சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டடுள்ளது.
இந்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாயும், இலவச ரேஷன் பொருட்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.

ஜூன் மாதத்தில் சென்னை திருவாரூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.தற்போது ஜூலை மாதமும் பொது போக்குவரத்து இன்றி சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு,தமிழக அரசு இந்த மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் 9ஆம் தேதி முதல் டோக்கன்கள் வீட்டுக்கே சென்று வழங்கப்படும் என்றும்,10ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் விலையில்லா ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.