பயங்கர குஷியில் அரசு ஊழியர்கள்…! இனிப்பான செய்தியை சொன்ன தமிழக அரசு…!

Photo of author

By Sakthi

பயங்கர குஷியில் அரசு ஊழியர்கள்…! இனிப்பான செய்தியை சொன்ன தமிழக அரசு…!

Sakthi

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து விதமான அரசு அலுவலகங்களும் இனி வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என அரசாணை வெளியிடப்பட்டு இருக்கின்றது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உட்பட வாரத்தில் ஆறு நாட்களும் இயங்குமென்ற விதிமுறை இருந்து வந்த நிலையில் இப்போது அந்த விதிமுறை மாற்றப்பட்டு அரசு அலுவலகங்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் இயங்கினால் போதும் என்று ஒரு புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருக்கின்றது.

அதே சமயத்தில் கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றுவரை அரசு அலுவலகங்கள் அனைத்தும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த நிலை மாற்றப்பட்டு 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.