அரசு ஊழியர்கள் போராட்டம் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? தமிழக அரசு விளக்கம்!

Photo of author

By Sakthi

தமிழக அரசுத்துறையில் வேலை செய்யும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருக்கும் பட்சத்தில் அது 62ஆக உயர்ந்துள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து தற்பொழுது தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் கீழ் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு 58 வயது வரை தான் பதவிக்காலம் ஆகும். 58 வயது ஆனவுடன் அவர்கள் அனைவரும் ஓய்வு பெற வேண்டும். ஆனால் சில சமயங்களில் ஓய்வு பெறும் வயது அடைந்தாலும் பதவிகளை பொறுத்து அவர்களுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்படும். அது ஊழியர்கள் வகிக்கும் பதவியையும் ஆளும் அரசையும் பொறுத்தது.
இதையடுத்து சமீப நாட்களாக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை தமிழக அரசு 62 ஆக உயர்த்தவுள்ளது என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. இதையடுத்து இந்த தகவல் குறித்து தமிழக அரசு தற்பொழுது விளக்கம் வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் குறித்து தமிழக அரசு “தற்பொழுது வரை அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக எந்த விதமான ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. அது சம்பந்தமான எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவும் இல்லை. அது குறித்து எந்தவொரு யோசனையும் இல்லை.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 62ஆக உயரப்போகின்றது அல்லது உயர்ந்தது என்று பரவி வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி தான். யாரும் இது போன்ற தவறான தகவல்களை வதந்திகளை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளது.