அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மத்திய அரசு!

0
221

தொழிலாளர்களின் எதிர்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.1% ஆக மத்திய அரசு குறைத்திருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்திருப்பதாவது, கடந்த 2021- 22 உள்ளிட்ட நிதி ஆண்டுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியிருக்கிறது என தெரிவித்துள்ளது.

சென்ற 2020-21 நிதி ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்ட சூழ்நிலையில், தற்போது அது 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது என பி.எஃப்.ஓ தெரிவித்திருக்கிறது. 5 கோடி தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இந்த அமைப்பில் கடந்த 1977-78 நிதியாண்டில் எதிர்கால வைப்புநிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 8% ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 40 வருடத்துக்கு பிறகு குறைந்த அளவாக 2021-22 நிதி ஆண்டுக்கு 8.1% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 2017- 18 நிதியாண்டில் 8.55 சதவீதமாக இருந்தது. அதேபோல 2016-18ல் 8.65 சதவீதமாகவும், 2018-19 ல் 8.65 சதவீதமாகவும், 2019 -20ல் 8.5% ஆகவும், நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், தற்போது அந்த வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட்டிருக்கிறது என்பது தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Previous articleஇங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய நியூஸிலாந்து அணி!
Next articleபணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட முன்விரோதம்; இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்ட இளைஞர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here