கூட்டுறவு தங்க நகை கடன் தள்ளுபடி! புதிய நிபந்தனைகளை வெளியிட்டது தமிழக அரசு!

0
124

ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகை கடன்கள் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் சமயத்தில் திமுக வாக்குறுதி கொடுத்திருந்தது தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நகை கடன் தள்ளுபடி காண பணிகளில் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இறங்கியது.

ஏராளமான நபர்கள் நகைக் கடன் பெற்று இருப்பதும், முறைகேடு செய்யும் நோக்கத்தில் பலர் நகைக்கடன் பெற்றிருப்பதும், தமிழக அரசின் கவனத்திற்கு வந்தது. இதனை அடுத்து நகை கடன் தள்ளுபடி பெறுவதற்கான தகுதி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீட்டு மாநிலம் முழுவதும் சரிபார்ப்பு பணி நடந்தது.

இந்த சூழ்நிலையில், 13 லட்சத்து 47 ஆயிரம் பேர் நகை கடன் ரத்து சலுகையை பெற தகுதியுடையவர்கள் என்று தற்சமயம் தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில், தேனியில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது இந்திய அரசியல் வரலாற்றில் கூட்டுறவு துறை மூலமாக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு முதல் முறையாக நகை கடன் தள்ளுபடி என்ற திட்டத்தை அறிவித்து கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரையில் நகை அடகு வைத்து இருக்கின்ற ஏழை, எளிய மக்கள் விவசாயிகளின் கடன்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தள்ளுபடி செய்து இருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கூட்டுறவு கடன் சங்கங்களில் 35 லட்சம் நகை கடன் வழங்கப்பட்டிருக்கிறது, அதில் ஒன்றரை லட்சம் நபர்கள் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்து அவர்கள் தங்களுடைய நகைகளை திரும்பப் பெற உள்ளார்கள். அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது அந்த கடன் தள்ளுபடி ரசீது அச்சடிக்கும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.

தள்ளுபடி பெறுபவர்கள் எண்ணிக்கை குறைவு என்ற செய்தி வந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது, சென்ற ஆட்சிக்காலத்தில் ஒரு நபர் மட்டும் 7 கோடி அளவுக்கு 760 நகை கடன்கள் பெற்றிருக்கிறார். அதேபோல தனிநபர்கள் நூற்றுக்கணக்கான நகை கடன்களை பெற்று இருக்கிறார்கள். இந்த வாரத்தில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீது வழங்கப்படும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் நகை கடன் தள்ளுபடி பணம் கேட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார்.

இதற்கு முன்னரே மகளிர் சுய உதவி குழுக்கள் வழங்கிய கடன் 2 ஆயிரத்து 260 ஒரு கோடியை தள்ளுபடி செய்து இருக்கிறோம் விவசாயிகளுக்கான பயிர்கடன் கிட்டத்தட்ட 12500 கோடி தள்ளுபடி செய்து இருக்கிறோம். நகைகளில் 6,000 கோடி தள்ளுபடி செய்திருக்கிறோம். கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள், அதை முதலமைச்சர் தான் ஸ்டாலின் தான் முடிவு செய்யவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் பெரியசாமி.

இந்த நிலையில், யார் யாருக்கெல்லாம் நகை கடன் தள்ளுபடி சலுகை கிடைக்கும் என்ற விவரத்தை அரசு அறிவித்திருக்கிறது இது தொடர்பாக அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில் தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி அவை விதி எண் 110ன் கீழ் பொது நகை கடன்கள் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். ஒரு குடும்பத்திற்கு ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகை கடன்கள் சில தகுதிகளின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனைதொடர்ந்து நகை கடன் தள்ளுபடி பெறுவதற்கான தகுதிகள் தொடர்பாகவும், தகுதியின்மை தொடர்பாகவும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன அதனடிப்படையில் உத்தேசமாக தகுதி பெறுவோர் மற்றும் தகுதி இல்லாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது அதனையடுத்து அண்டை மாவட்ட அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியின் முடிவடைவதற்குள் மேலும் காலதாமதம் ஆகும் என்பதை கருத்தில் வைத்தும் இதன் காரணமாக, கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையில்லாமல் நிதி இழப்பீடு ஏற்படும் என்பதை கருத்தில் வைத்தும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்து இருக்கிறார்.

இணை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 நகைக்கடன் விபரங்கள் அனைத்தும் கணினி மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு அவற்றின் 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 கடன்களுக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி பெறாத தேர்வுகள் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி கற்றவர்கள் மற்றும் நியாய விலை கடை அட்டையில் இடம் பெற்றிருக்கின்ற அவர்களுடைய குடும்பத்தினர்.

அதேபோல நகை கடன் தொகையை முழுமையாக செலுத்தியவர்கள் 40 கிராமுக்கு மேல் நகை கடன் பெற்ற நபர்கள் மற்றும் குடும்பத்தை சார்ந்தவர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கூட்டுறவு சங்கங்களின் பணிபுரியும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.

அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள், ரேஷன் அட்டை நம்பர் மற்றும் ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள் எந்த பொருளும் வேண்டாம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகைக்கடைகள் மூலமாக 40 கிராமுக்கு மேலாக கடன் பெற்ற தகுதியுடைய ரேஷன் அட்டைதாரர்கள் போன்றவர்களுக்கெல்லாம் நகை கடன் தள்ளுபடி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் தள்ளுபடி தகுதிபெறும் நகைக்கடன் நபர்களின் மாவட்ட வாரியான பட்டியல் இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. தகுதி இல்லாத மற்றும் உத்தேச தகுதி பெற்றவர்களின் பட்டியலின்படி கள ஆய்வு செய்யும்போது தகுதி பெற்றவராக தெரிந்தால் அவர்களை கூடுதலாக சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஆதார் எண், ரேஷன் அட்டை எண் உள்ளிட்டவற்றை குறைபாடுடன் வழங்கியிருந்தால் அவர் தகுதி பெறாத பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பார், கள ஆய்வில் அவருடைய ஆதார் மற்றும் ரேஷன் அட்டையின் முழுமையாக வழங்கப்பட்டால் அவரும் கடன் தள்ளுபடி தகுதி பெற்றவர் ஆகிவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பதிவாளர் அலுவலகத்தில் இருந்து இறுதி ஒப்புதல் பெற்ற பிறகே பொது நகை கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதிருச்சியில் பல முக்கிய திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!
Next articleதீவிரமாகப் பரவத் தொடங்கிய புதிய வகை நோய்த்தொற்று பரவல்! கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!