கலைஞர் கைவினை திட்டம்!! தமிழ்நாடு அரசு  அதிரடி அறிவிப்பு!!

0
84
Government of Tamil Nadu has decided to provide loan assistance to 25 types of industries under "Artist Handicrafts Scheme"
Government of Tamil Nadu has decided to provide loan assistance to 25 types of industries under "Artist Handicrafts Scheme"

Tamil Nadu Govt: “கலைஞர் கைவினைத்திட்டம்” கீழ் 25 வகையான தொழில்களுக்கு கடன் உதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழ்நாடு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்த வகையில் தொழில் தொடங்குபவர்கள ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி “கலைஞர் கைவினைத்திட்டம்” உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அரசு ஆணை சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட்டார் முதலமைச்சர்.

இந்த திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்களுக்கு கடன் உதவி வழங்கப்பட இருக்கிறது. அதாவது, மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலை, கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலை, மண்பாண்டங்கள் தயாரித்தல் போன்ற தொழில்களுக்கும். மேலும், துணி வெளுத்தல் தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி நெய்தல் போன்ற வேலைகளுக்கும்.

துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலை, மூங்கில், சணல், பனை ஓலை. பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், கைவினைப் பொருள்கள் வேலை பாடுகள் செய்யும் தொழில் உட்பட 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

கலைஞர் கைவினைத் திட்டத்தில் ரூ.50,000க்கு 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 இருக்க வேண்டும். இன்று, முதல் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. www.msmeonline.in.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Previous articleஎன்னை “ராசி இல்லாத இசையமைப்பாளர்” என்று கூறியவர்களே அதிகம்!! உண்மையை பகிர்ந்த யுவன்!!
Next articleதிருப்பதி செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!APSRTC பேருந்துகளிலேயே சிறப்பு தரிசன டிக்கெட்!!