இதை உடனே செய்யுங்கள்! கூட்டுறவு சங்கங்களுக்கு மாநில அரசு விதித்த தடை உத்தரவு!

Photo of author

By Sakthi

நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் இறுதிப் பட்டியலை தயார் செய்வதற்கு குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியிருக்கின்ற சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

சட்டசபையில் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி அவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்குட்பட்ட நகை கடன் சில பகுதிகளில் கீழ் உண்மையான ஏழை, எளிய, மக்கள் பயன்பெறும் விதத்தில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதற்கான தகுதி மற்றும் தகுதியில்லாத நேர்வுகள் தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் சென்ற நவம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டன. வெளிமாவட்டங்களில் இருக்கின்ற வங்கியின் பணியாளர்கள், நகை பரிசோதகர்கள், உள்ளிட்டோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு 100 சதவீத ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் தரவுகளும் பெறப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒரே ஆதார் எண்ணுக்கு வழங்கப்பட்ட பல பொது நகைக்கடன் பட்டியில் ஒரே ரேஷன் அட்டையில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பெற்ற ஒன்றுக்கும் மேற்பட்ட பொது நகைக்கடன் பட்டியல், ஆதார் எண் கொடுக்காமல் ரேஷன் எண்ணை மட்டும் வழங்கியவர்களின் தரவுகளை மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிட்டு தொகுக்கப்பட்ட கடன்தாரர்கள் பட்டியல், ரேஷன் கார்டின் எண் வழங்காமல் ஆதார் என்னை மட்டும் வழங்கியவர்களின் தரவுகளை மற்ற மாவட்ட தரவுகளுடன் ஒப்பிட்டு தொகுக்கப்பட்ட கடன்தாரர்கள் பட்டியல், உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரே ஆதார் எண்ணின் அடிப்படையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு கொடுக்கப்பட்ட 40 கிராமுக்கு மேலான அனைத்து பொது நகை கடன்கள், ஒரே ரேஷன் அட்டை எண்ணின் அடிப்படையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழங்கப்பட்ட 40 கிராமுக்கு மேற்பட்ட அனைத்து பொது நகை கடன் பெற்று நகை கடன் தள்ளுபடி தகுதியில்லதவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்கு பின்னர் வழங்கப்பட்ட பொது நகைக்கடன் நகைகளின்றி ஏட்டளவில் வழங்கப்பட்ட நகை கடன், போலி நகைகளுக்கு வழங்கப்பட்ட கடன், கடன் தள்ளுபடிக்கு விருப்பமில்லாதவர்களின் நகை கடன் மற்ற மாநில முகவரிகளை கொண்டு ஆதார் அட்டையில் பெற்ற நகை கடன், மற்ற மாநிலங்கள் வழங்கிய ரேஷன் அட்டையில் பெற்ற நகைக்கடன் உள்ளிட்டவை தள்ளுபடிக்கு தகுதியானவர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தகுதி பெற்றவர்கள் விவரங்களில் சந்தேகம் எழுமானால் அவர்களை தகுதியற்றவர்கள் பட்டியலில் இணைத்து அதற்கான காரணங்களை குறிப்பிடவேண்டும்.

தகுதி பெற்றோர் மற்றும் தகுதியற்றோரின் பட்டியலை அனைத்து காரணங்களையும் குறிப்பிட்டு பதிவாளர் அலுவலகத்திற்கு 11ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.