தமிழக அரசு வேலை!! 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!! மாதம் 50,000 வரை சம்பளம்!!

Photo of author

By Preethi

தமிழக அரசு வேலை!! 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!! மாதம் 50,000 வரை சம்பளம்!!

தமிழ்நாடு மீன்வளத்துறையில்‌ அலுவலக உதவியாளர்‌ பதவிக்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. பதிவு அஞ்சல்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்            :  தமிழ்நாடு மீன்வளத்துறை
பணி                       : அலுவலக உதவியாளர்‌
கல்வித் தகுதி    :  8ஆம் வகுப்பு
பணியிடங்கள்  : 05
கடைசி நாள்       :  31-07-2021

கல்வித் தகுதி:
எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்‌.

வயது வரம்பு:
ஆதி திராவிடர்‌, ஆதி திராவிடர்‌ (அருந்ததியர்கள்‌) மற்றும்‌ பழங்குடி வகுப்பினர்‌ 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ / சீர்மரபினர்‌, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌, மற்றும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ (முஸ்லீம்‌) 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதர வகுப்பினர்‌  (மேற்கண்ட வகுப்பை சாராதவர்கள்‌)18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சிறப்பு சலுகை உள்ளவர்கள்‌ முன்னாள்‌ இராணுவத்தினர்‌, விதவைகள்‌, போரில்‌ கணவனை இழந்தவர்கள்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌ (எல்லா வகுப்பினர்களும்‌ தகுதியுடையவர்கள்‌)
நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி இருக்க வேண்டும்.

ஊதியம்:
குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்‌ ஒரு விண்ணப்பம்‌ மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்குமேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ எவ்வித முன்னறிவிப்புமின்றி இரத்து செய்யப்படும்‌. விண்ணப்பம்‌ இணையதளம்‌ www.tnfisheries.com இல்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.