தமிழக அரசு.. மாணவர்களுக்கு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Jeevitha

Tamil Nadu Government: நம் தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு முக்கிய நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு “தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது .இந்த திட்டத்தில் 10ஆயிரம் முத்தம் 25ஆயிரம் வரை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

நம் தமிழக அரசு அறிவித்த “தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்” என்ற திட்டத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் முதல் 25ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது என அறிவித்துள்ளது. பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்திற்கு தகுதி பெற மாணவர்களின் ஆண்டு வருமானம் ரூபாய்.8 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதில் முனைவர் பட்ட மேலாய்வாலற்களுக்கு மாதம் 25,000 மூன்று வருடத்திற்கு வழங்கப்படும். இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதம் 10,000  ரூபாய் ஆறு மாதத்திற்கு வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான விதிமுறைகள் https://www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் தற்போது தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தினை 2024-2025ஆம் ஆண்டில் செயல்படுத்த இத்திட்டத்திற்கான விண்ணப்பம் 05.11.2024-லிருந்து இணையவழியிலும் (online) இயன்முறையிலும் (offline) வரவேற்கப்படுகின்றன. மேலும் இணைய வழியில் விண்ணபிக்க மாணவர்கள் https://forms.gle/BDdkHTL6Ltkt5ToQ7 என்ற இணைப்பில் நேரடியாக 30.11.2024-க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் offline லில் விண்ணபிக்க விரும்பும் மாணவர்கள் https://www.tn.gov.in/forms/deptname/1  இதிலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட விண்ணப்பதை படி இயக்குனர், பழங்குடியினர் நலன், சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு 30.11.2024 க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது