பொங்கல் பரிசு தொகை! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Photo of author

By Sakthi

பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் பரிசுத் தொகுப்பு எப்போதும் அரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரிப்பருப்பு, உள்ளிட்டவையுடன் சேர்ந்து பணமும் வழங்கப்படும். இதுதான் கடந்த கால ஆட்சியின் போது இருந்த வழக்கம்.

ஆனால் தற்சமயம் புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூடிய திமுக அரசு ரொக்கத்தை மட்டும் தவிர்த்துவிட்டு மற்ற பொருட்கள் அனைத்தையும் வழங்க இருப்பதாக முன்பே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் அதிர்ச்சி உண்டானது. அதன் பிறகு தமிழக அரசின் இந்த முடிவு மாற்றிக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வரும் தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1088 கோடி செலவில் ஒரு ரேஷன் அட்டைக்கு 505 ரூபாய் செலவில் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது என கூறி இருக்கிறார்.

அதோடு முந்திரி, திராட்சை, ஏலக்காய், உள்ளிட்டவற்றை பழுப்புநிற காகித உறைகளில் பொட்டலமிட்டு வைத்திருக்க வேண்டும் .பயனாளிகளுக்கு எல்லாவிதமான பொருட்களும் ஒரே தவணையில் வழங்கும் அளவில் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எந்த காரணத்தை முன்னிட்டும் பொருட்கள் இல்லை என்று குடும்ப அட்டைதாரர்களை திருப்பி அனுப்பக்கூடாது, பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து நாள்தோறும் அறிக்கை பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்காக கட்டுப்பாட்டு அறை அமைத்து பிரத்தியேக தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டு துணைப்பதிவாளர் நிலையில் தொடர்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு ,பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை ரேஷன் கடைகளில் அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல பொங்கல் பரிசுத் தொகை ஜனவரி மாதம் 3ம் தேதியிலிருந்து வழங்க அரசு உத்தரவிட்டு இருக்கிறது. பொங்கல் பரிசு வழங்கப்படும் தொகை எவ்வளவு என்பது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.