ADMK BJP: தமிழகத்தில் கால் பாதிக்க முடியாமல் தவிக்கும் பாஜக, பீகார் தேர்தல் பெற்ற வெற்றியை மையப்படுத்தி வென்றுவிடலாம் என்று ஆலோசித்து வருகிறது. இதற்காக அதிமுக உடன் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து பல்வேறு வியூகங்களையும் வகுத்து வருகிறது. இபிஎஸ்யிடம் அதிக தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பாஜக இந்த முறை தமிழக ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது. இதனை பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறி வந்தனர்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெளிவாக கூறியிருந்தார். இவ்வாறு பாஜகவை சேர்ந்தவர்கள் ஆட்சி பங்கை வலியுறுத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. தம்பிதுரையிடம் ஆட்சியில் பங்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, கண்டிப்பாக யாருக்கும் ஆட்சியில் பங்கை யாருக்கும் கொடுக்க மாட்டோம், அதிமுக மட்டுமே தனித்து ஆட்சி அமைக்கும். இது தொடர்பான அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி விரைவில் தெரிவிப்பார் என்றும் கூறினார். இவ்வாறு அதிமுகவும், பாஜகவும் ஆட்சி பங்கு தொடர்பாக கருத்து தெரிவித்து வருவதால், அவர்களுக்குள் சச்சரவு அதிகரித்து கொண்டே செல்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதை விரும்பாத இபிஎஸ் ஆட்சி பங்கு கோரிக்கையை எவ்வாறு எதிர் கொள்ள போகிறார் என்பது தெரியவில்லை.

