நாடகம் பார்த்த அரசு பள்ளி மாணவர்கள்! தூக்கு தண்டனை கொடுத்த அரசு!
நாடகம் பார்த்த 30 அரசு பள்ளி மாணவர்களுக்கு வடகொரிய அரசு தூக்கு தண்டனை கொடுத்துள்ளது. வடகொரிய அரசின் இந்த செயல் தற்பொழுது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகொரியா நாட்டில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றது. வடகொரிய நாட்டின் சட்ட திட்டம் மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வடகொரியா நாட்டுக்கும் தென் கொரியா நாட்டுக்கும் ஆகாத சூழ்நிலையில் தற்பொழுது வடகொரியா நாடு செய்த செயல் ஒன்றை தென்கொரியா நாடு கூறியுள்ளது.
அதாவது தென்கொரியா நாட்டில் இருந்து எடுக்கப்படும் நாடகங்களை சேனல் வழியாக வடகொரியா நாட்டில் பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் பார்த்ததால் எங்கள் நாட்டு நாடகங்களை பார்த்த 30 மாணவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கி இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை சோசன் டிவி மற்றும் கொரியா ஜூங்ஆங் டெய்லி என்ற இரண்டு நாளிதள்கழும் வெளியிட்டுள்ளது. எனினும் 30 மாணவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கியது தொடர்பாக வடகொரிய அதிகாரிகளோ அல்லது தென் கொரிய அதிகாரிகளோ எந்தவித அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் பலரும் 30 மாணவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கியது உண்மையா இல்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும் பக்கத்து நாட்டின் திரைப்படங்களை பார்த்ததற்கு ஒருவர் கொல்லப்படுவது வடகொரியா நாட்டில் இது ஒன்றும் புதிது கிடையாது. இதே போல கடந்த 2022ம் ஆண்டு கொரியா நாட்டு திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அடங்கிய பென்டிரைவ் ஒன்றை ஒரு நபர் விற்பனை செய்துள்ளார். இந்த தகவல் வடகொரிய அரசுக்கு தெரியவர பென்டிரைவ் விற்பனை செய்த அந்த நபரை வடகொரிய அரசு சுட்டுக் கொன்றது. இந்த தகவலை ஐ.நா என்று அழைக்கப்படும் ஐக்கியநாடுகள் சபை உறுதி செய்துள்ளது.
அது மட்டுமில்லாமல் 2024ம் ஆண்டு தொடக்கத்தில் கூட இதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது இரண்டு மாணவர்கள் K Pop வீடியோ பார்த்துள்ளனர். அதற்கு வடகொரியா அரசு அந்த இரண்டு மாணவர்களுக்கும் 12 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
எனவே வரலாற்றை வைத்து பார்க்கும் பொழுது இது உண்மையாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசு தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.