எங்கு பார்த்தாலும் திராவிடம்!! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய  ஆளுநர்!!

Photo of author

By Sakthi

Governor RN Ravi:எங்கு பார்த்தாலும் திராவிடம்,வரலாறு என்ற பெயரில் சுதந்திர போராட்ட வீரர்களை மறந்து விட்டார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையாகி உள்ளது.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு 2021 ஆண்டு பதவி ஏற்றார். பதவி ஏற்ற நாள் முதல் திமுக அரசுக்கும் ஆளுநராக ஆர்.என்.ரவிக்கும் இடையில்  கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டு விடுகிறார் என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது. மேலும் சமீபத்தில்  தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல்லை விட்டு பாடியதாக சர்ச்சை எழுந்தது, இதை தொடர்ந்து புத்தக வெளியிட்டு விழாவில் திராவிடம் மற்றும் சமூக நீதி பற்றி பேசியது சர்ச்சையாகி வருகிறது.

அதாவது,எழுத்தாளர், பி. செந்தில் குமார் எழுதிய பாஞ்சாலங்குறிச்சி போர்கள் என்ற புத்தம் வெளியீட்டு விழா நேற்று  சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி  வெளியிட்டார். மேலும் அவர் தமிழக பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் உள்ள குறைகளை பற்றி பேசினார். அதாவது தமிழக பல்கலைக்கழக பாடங்களில் திராவிடம் குறித்த வரலாறுகள் தான் அதிகமாக உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் சிறந்தது என்று குறிப்பிடும் வரலாற்றை மாணவர்கள் கற்பிக்கிறார்கள். இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறுகள் குறைந்த அளவிலேயே உள்ளது.மேலும் பாடப் புத்தகத்தில் ஆங்கிலேயர்கள் குறித்த தகவல்கள் அதிக அளவில் உள்ளது.

19 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் பொற்காலம் என்றும், ஆங்கிலேயர்கள் சமூக நீதியை கடைபிடித்து இருக்கிறார்கள் என்று கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. 10 லட்சம் இந்தியர்களை அடிமையாக மாற்றியது ஆங்கிலேயர் அரசு இது சமூக நீதியா என்று கேள்வி எழுப்பினார்.