மாணவர்கள் மகிழ்ச்சி! திடீரென்று விடுமுறையை அறிவித்த மாவட்ட நிர்வாகம்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருக்கின்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆண்டுதோறும் மிகவும் விமர்சையாக திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த திருவிழாக்களை முன்னிட்டு அந்தந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களால் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த விதத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தெரிவித்திருப்பதாவது, நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில் பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு அங்கே நாளை விடுமுறை வழங்கப்படுகிறது என கூறி இருக்கிறார்.

அதோடு அங்கே நாளை தேரோட்டம் நடைபெற இருப்பதாகவும் அதனை முன்னிட்டு நகரம் மற்றும் வட்டத்தில் இருக்கின்ற அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒருநாள் விடுமுறை வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

அதோடு விடுமுறையை ஈடு கட்டும் விதத்தில் வரும் சனிக்கிழமை அன்று பள்ளிகள் வழக்கம் போல நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.