China Government: மக்கள் தொகையை பெருக்க சீன அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் திருமணமான ஒவ்வொரு பெண்களிடமும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள போகிறீர்கள் என கேட்டு வருகின்றனர்.
மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது சீனா. தற்போது இரண்டாவது இடமாக சென்றுள்ளது. இந்த நிலையில் சீனா அரசு தன் நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் முறையை தீவிரமாக முயற்சித்து வந்தது. இந்த நிலையில் சீனா அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக பெரிய அளவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இதனால் மக்கள் தொகை கடும் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற முறையை 2015 ஆம் ஆண்டு கைவிட்டது. இதனால் சீன அரசு மீண்டும் பழைய நிலைக்கு வர முடிவு செய்தது. அந்த நிலையில் திருமணமான ஒவ்வொரு பெண்களிடமும் குழந்தை பேறு குறித்து விசாரித்து வருகின்றனர். நம்மூரில் (credit card) வேண்டுமா? என நச்சரிப்பார்களே அதே பாணியில் சீனாவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தை எப்போது பெற்றுக் கொள்ள போகிறார்கள்? என கேட்டு போன்(Phone) செய்து டார்ச்சர் செய்கிறார்கள் என சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி ஊடகம் தெரிவித்து இருந்தது.
அது மட்டும் அல்லாமல் இந்த அழைப்பு அங்கு வசிக்கும் பல பெண்களுக்கு சர்வ சாதாரணமாக இருப்பதாகவும், கடைசியாக எப்போது மாதவிடாய் வந்தது என்றும் கூட சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்பதாகவும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்திருக்கிறது. மக்கள் தொகை சரிவு பிரச்சினை சீனாவிற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகத்தையே பாதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.