Registration Department: சுப முகூர்த்த நாட்களில் சார்பதிவாளர்கள் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன் வழங்க அரசு முடிவு.
இந்தியாவில் உள்ள பிற அரசு துறைகள் தற்போது டிஜிட்டல் மையமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பதிவு துறையிலும் புதிய மாற்றங்களை செய்து வருகிறது மத்திய அரசு. மேலும் இந்த வருடம் பதிவு துறைக்கு ரூ.25,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயம் செய்து உள்ளது. தற்போது தமிழகத்தில் பதிவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 56 மாவட்ட பதிவு துறையில் 582 சார் பதிவாளர்கள் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் ஒரு நாளில் 100 டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது இதன் மூலம் மக்களின் ஆவணப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பதிவு துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். அதில் வழக்கமாக, சார்பதிவாளர் அலுவலகங்களில் தினமும் 100 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். விசேஷ நாட்களில் அது இரட்டிப்பாக கொடுக்கப்படும்.
இந்த நிலையில் அதனை 300 டோக்கன்கள் விநியோகிக்கும் வகையில் உயர்த்தப்படும் என தெரிவித்து இருக்கிறார். மேலும் பொதுவாக வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
குறிப்பாக சுபகூமுர்த்த தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும், எனவேகார்த்திகை மாதம் அதிக சுப முகூர்த்த நாட்கள் வருவதால் கூடுதல் பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.