“ஓட்டுநர் உரிமம் பெற இனி இது அவசியம்” தமிழக அரசு அறிவிப்பு…!!

Photo of author

By Priya

“ஓட்டுநர் உரிமம் பெற இனி இது அவசியம்” தமிழக அரசு அறிவிப்பு…!!

Priya

Driving Licence Rules in Tamil

Driving Licence Rules in Tamil: கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் பெறுவதை எளிமையாக்கி அறிவிப்பு ஒன்று வெளியிட்டு இருந்தது. அதன்படி இனி ஓட்டுநர் உரிமம் பெறுபவர்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் தனியார் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்திருந்தது. அதன்படி இந்த விதிமுறை ஜூன் 1ஆம் தேதி அமல்படுத்துவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தான் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமைப் பெறுவதற்கோ அல்லது பழைய ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்கோ விதிமுறை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய மோட்டார் வாகன விதி எண் 5-ன் படி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ் பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமம் பெறுவது அல்லது பழைய ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இனி மருத்துவச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் புதிய ஓட்டுநர் உரிமம் மற்றும் பழைய ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாநிலத்தின் ஒரு சில இடங்களில் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவ சான்று பெறாமல் போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ள நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன. இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக சாரதி மென்பொருளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங் பதிவு சான்று எண்ணை பதிவேற்றம் செய்து, சாரதி மென்பொருளில் கேட்கப்படும் தங்களது மருத்துவமனை அல்லது கிளினிக் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரு முறை பதிவேற்றம் செய்து கொண்டு தங்களது பெயரையும் ஒருமுறை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதனைத் தொடர்ந்து தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். இதனை முடித்த பின்பு அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் சாரதி மென்பொருளை பயன்படுத்தி விண்ணப்பதாரர்களின் மருத்துவ சான்றினை பதிவேற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படும். மருத்துவர்கள் தங்கள் விவரங்களை முதலில் உள்ளீடு செய்து தங்களுக்கான சாரதி மென்பொருளில் நுழைவினை ஒரு முறை உறுதி செய்து கொண்டால் போதுமானது அவ்வாறு முறையாக சாரதி மென்பொருளில் பதிவு செய்து கொண்ட பின்னர் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ சான்றினை மருத்துவர்கள் எலக்ட்ரானிக் முறையில் சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.

எனவே தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை இனி பயன்படுத்தி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவ சான்றிதழ் மின்னணு வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய இயலும். இதன் மூலம் போலி மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழை முறைகேடாக பயன்படுத்தி வந்தது தடுக்கப்பட்டுள்ளது.

நாளை செயல்முறை விளக்கம்

இந்த சாரதி மென்பொருளில் மருத்துவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்வது குறித்தும், தங்களது பதிவுகளை உறுதி செய்வது குறித்தும் நாளை காலை 11 மணி அளவில் மாநிலம் முழுவதிலும் உள்ள அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ஒரு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்படும். அதில் கலந்துகொண்டு தங்களது பதிவுகளை இறுதி செய்யும் முறைகள் குறித்து மருத்துவர்கள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சார்பில் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இனி லைசென்ஸ் வாங்க ஆர்டிஓ ஆபீஸ் செல்ல வேண்டாம்..!! தனியார் பயிற்சி நிறுவனங்கள் வழங்கும்!!