பட்டாசு ஆலைகளை அரசு கண்கானிக்க வேண்டும்! அதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!
பட்டாசு ஆலைகளையும், குடோன்களையும் அரசு கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி கே பழனி சாமி அவர்கள் “சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியில் இருக்கும் பட்டாசு குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி அங்கு பணி செய்தவர்கள் 8 பேரில் 4 உயிரிழந்துள்ளனர். இந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மேலும் 4 பேர் கவலைக் கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியை அறிந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துகள் நடந்து வருவது தினசரி செய்தியாக வருகின்றது. எனவே இந்த விடியா அரசு பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் குடோன்கள் அரசு நிர்ணயித்த விதிகளை பின்பற்றுகின்றனவா என்று தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும். மேலும் காயமுற்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சையும் உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று இந்த விடியா அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.