அந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம் பொருத்த வேண்டும்! சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி! 

Photo of author

By Sakthi

அந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம் பொருத்த வேண்டும்!! சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி!!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அதாவது தூய்மை பணியில் ஈடுபடும் சென்னை மாநகராட்சியின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அவர்கள் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் பொக்லைன், மெக்கானிஸ் ஸ்வீப்பர், குப்பை லாரிகள் ஆகிய வாகனங்களை தூய்மை பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது தமிழகம் முழுவதிலும் உள்ள பகுதிகளில் நடைபெற்று வருகின்றது.
இதே போல சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை மேற்கொள்வதில் அரசுத் துறையும் தனியார் துறையும் இரண்டும் இணைந்து செயல்பட்டு வருகின்றது. இதில் தனியார் வசம் குப்பை லாரிகள் போன்ற 2287 வாகனங்கள் இருக்கின்றது. அதே போல மாநகராட்சி வசம் குப்பை சேகரிப்பு, தூர் வாருவது போன்று பல வகையான தேவைகளுக்கும் சுமார் 2886 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதையடுத்து மாநகராட்சி ஓட்டுநர்களில் ஒரு சில பேர் வருகை பதிவேட்டில் கையெழுத்து இட்டுவிட்டு தன்னுடைய சொந்த பணிகளுக்காக செல்கின்றனர். இதனால் இயக்கப்பட வேண்டிய குப்பை லாரிகள், பொக்லைன் வாகனம் ஆகியவை அப்படியே இருக்கின்றது.
மேலும் மாநகராட்சி ஓட்டுநர்கள் தன்னுடைய சொந்தமுன வேலைகளுக்கு செல்வதால் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுகள் எதுவும் தூர்வாரப்படவில்லை என்று மாநகராட்சிக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் மாநகராட்சியின் ஓட்டுநர்களின் இந்த செயல்களை தடுக்க சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுரபரன் அவர்கள் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதாவது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொக்லைன் வாகனம், மெக்கானிஸ் ஸ்வீப்பர், குப்பை லாரிகள் போன்ற வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியை பொருத்த வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வாகனங்களை இயக்கி கண்காணிக்க அனைத்து மாநகராட்சி வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும். ஜிபிஎஸ் கருவி பொருத்தினால் அனைவரும் வேலை செய்கிறார்களா இல்லையா என்பதை வாகனங்களின் இயக்கத்தின் மூலமாக தெரிந்து கொள்ள முடியும். எனவே அனைத்து மண்டல அலுவலர்களும் விரைவில் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவியை பொருத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுரபரன் அவர்களின் உத்தரவை தொடர்ந்து மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தம் பணிகள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்