100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த பாட்டி!!! உயிருடன் பாட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்!!!

Photo of author

By Sakthi

100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த பாட்டி!!! உயிருடன் பாட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்!!

ஈரோடு மாவட்டத்தில் 100 அடி கிணற்றில் தவறி விழுந்த 80 வயது நிரம்பிய பாட்டியை உயிருடன் பத்திரமாக தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் சூளை ஈபிபி நகரில் 80 வயது நிரம்பி வள்ளியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். வள்ளியம்மாள் பாட்டி அவர்கள் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் குடியிருப்பில் உள்ள வீட்டில் தங்கி வசித்து வருகிறார்.

வள்ளியம்மாள் பாட்டி தங்கி வசிக்கும் காம்பவுண்ட் பகுதியில் 100 அடி ஆழம் கொண்ட பொது கிணறு ஒன்று உள்ளது. 100 அடி ஆழம் கொண்ட இந்த கிணறில் 10 அடி ஆழத்தில் மட்டுமே தண்ணீர் உள்ளது.

இந்த நிலையில் வள்ளியம்மாள் பாட்டி இன்று(செப்டம்பர்14) காலை ரேஷன் கடைக்கு கிளம்பி சென்றுள்ளார். கிளம்பி செல்லும் பொழுது 100 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் வள்ளியம்மாள் பாட்டி எதிர்பாராத விதமாக கிணற்றினுள் விழுந்தார். கிணற்றில் இருந்த கயிற்றை பிடித்தவாறு வள்ளியம்மாள் பாட்டி அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.

நீண்ட நேரம் ஆகியும் வள்ளியம்மாள் பாட்டி அவர்கள் வீட்டுக்கு வராததால் அவருடைய உறவினர்கள் வள்ளியம்மாள் பாட்டியை தேடி அந்த வழியாக வந்தனர். பிறகு கிணற்றில் இருந்து சத்தம் வந்ததால் கிணற்றினுள் எட்டி பார்த்தனர். அப்பொழுது வள்ளியம்மாள் பாட்டி கூச்சலிட்டுக் கொண்டே இருந்ததை பார்த்து உறவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் வள்ளியம்மாள் பாட்டியை காப்பாற்ற தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு உதவி அலுவலர் கலைச்செல்வம் தலைமையில் தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்தனர். பின்னர் உடனடியாக கயிறு கட்டி கிணற்றினுள் இறங்கி வள்ளியம்மாள் பாட்டியை உயிருடன் காப்பாற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.