TNPSC: குரூப் 2, 2ஏ தேர்வு OMR விடைத் தாளில் தான் நடைபெறும், தமிழக தேர்வாணையம் அறிவிப்பு.
தமிழகத்தில் அரசு துறை சார்ந்த வேலைக்கு தேர்வுகள் தமிழக தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள் குரூப் 1,குரூப் 2, 2ஏ , குரூப் 4, என்று அரசு துறை சார்ந்த பதவிகள் நிலையை கொண்டு நடத்தப்படுகிறது. மேற்கூறிய தேர்வு முறைகளுக்கு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தேர்வு முறைகளை வைத்து இருக்கிறது.
மேலும், காலியாக இருக்கும் பணியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான தேர்வை நடத்துவது இதன் வேலை ஆகும். மேலும், அந்த தேர்வுகளில் மாற்றம் ஏதாவது கொண்டு வர வேண்டும் என்றால் தேர்வாணையம் முடிவு செய்யும். அந்த வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது தேர்வாணையம். அதாவது, கடந்த 14 ஆம் தேதி குரூப்-2 நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு பதிவு செய்த 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 தேர்வர்களில் 5,83,467 பேர் முதல்நிலை தேர்வு எழுதி இருக்கிறார்கள். இந்த நிலையில் குரூப் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில் 2,006 பணியிடங்களுக்கு 21,822 முதன்மைத் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கணினி (CBT Mode) வழியாக குரூப் 2, 2A முதன்மைத் தேர்வு நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த தேர்வர்கள் மத்தியில் ஒரு குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அதை சரி செய்யும் விதமாக வருகிற ஆண்டில் குரூப் 2, 2ஏ தேர்வு OMR விடைத் தாளில் தான் நடைபெறும் அறிவித்து இருக்கிறது.