TNPSC: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இன்று வெளியான நிலையில், மேலும் தேர்வு எழுதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. காலி பணியிடங்களின் எண்ணிக்கைக்கு உயர்வு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிலையில் முதலில் வெறும் 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு மீண்டும் இரண்டு முறை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
அதன்படி மொத்தம் 8,932 காலிப்பணியிடங்கள் உள்ளன என அரசு அறிவித்தது. தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அரசு மேலும் காலி பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதில் (559) காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, தற்போது காலி பணியிடங்களின் எண்ணிக்கை (9,491) ஆக உயர்ந்துள்ளது.
இதனால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஏனெனில் காலி பணியிடங்கள் கூடும் போது கட் ஆப் மதிப்பெண் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் TNPSC ஆர்வலர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இது மட்டும் அல்லாமல் தேர்வு முடிந்த 92 நாட்களில் முடிவுகள் வெளியானது, இதுவே முதல் முறை என்று வியந்துள்ளார்கள்.
மேலும் இன்று வெளியான தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையத்தில் தேவையான தகவலை உள்ளிட்டு தனது மதிப்பெண் எவ்வளவு என அறிந்து கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும். தபால் மூலம் எந்த ஒரு செய்தியும் வராது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.