Growing tips for tomato in tamil: நம் அனைவருக்கும் வீட்டில் தோட்டம் அமைத்து அதில் காய்கறிகளை நடவு செய்து இயற்கையான முறையில் பராமரித்து அதனை அறுவடை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலர் வீட்டு மாடிகளில் மாடி தோட்டம் அமைத்து அதில் நிறைய காய்கறிகள், பழங்கள், செடிகள், கொடிகள் என அனைத்தும் வைத்து பராமரித்து வருகிறார்கள். ஒரு சிலர் வீட்டில் குறிப்பிட்ட செடிகளை மட்டும் வைத்து அதை பராமரித்து வருவார்கள். அந்த வகையில் அவர்கள் வைக்கும் செடிகளில் காய்கறிகள் காய்ப்பது இல்லை. ஏனென்றால் அதனை அவர்கள் சரியாக பராமரித்தாலும் குறைந்த அந்த செடி அவர்கள் எதிர்ப்பார்த்த பலனை கொடுப்பது இல்லை.
அந்த வகையில் நம் வீட்டில் வைத்த தக்காளி செடி நல்ல மகசூலை கொடுக்க வேண்டும் என்றால் பின்வரும் (thakkali chedi valarpu) குறிப்புகளை பின்பற்றினால் தக்காளி செடி நன்றாக காய்க்கும்.
தக்காளி செடியில் தக்காளி வளர டிப்ஸ்
நீங்கள் தோட்டத்தில் விதை விதைத்தாலும் அல்லது தொட்டியில் நடவு செய்தாலும் மண் கலவை முக்கியமானதாகும். முதலில் தக்காளி செடியை நடவு செய்வதற்கு உரம், மண் இவை இரண்டையும் நன்றாக கலந்து ஒரு வாரம் நன்றாக காய வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அதில் உள்ள நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கும். உடனே உரம் கலந்த மண்ணில் நடவு செய்தால் விதைகள் வளராது.
நீங்கள் மாடியில் செடியில் வைக்க நினைத்தால் மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டி இதில் இரண்டில் எதில் வேண்டுமானாலும் நீங்கள் விதையை நடவு செய்யலாம்.
முதலில் தக்காளி விதைகளை வாங்கி வந்து அதனை தொட்டியில் வைத்தால் அரை அங்குலம் வரை மண்ணை நிரப்பி அதன் மேல் விதைகளை தூவ வேண்டும். பிறகு அதன் மீது மண் கலவை போட்டு சிறிதளவு தண்ணீரை தெளித்து விட வேண்டும். தண்ணீர் அதிகமாக ஊற்றி விடக்கூடாது இல்லையெனில் விதைகள் வளராது.
இவ்வாறு மண் கலவை செய்து ஒரு வாரம் கழித்து தக்காளி விதைகளை தூவி, சிறிதளவு நீர் தெளித்து வந்தால் விதைகள் ஒரு வாரத்தில் செடியாக முளைக்க தொடங்கும். இவ்வாறாக சிறிது, சிறிதாக நீர் தெளித்து செடி ஓரளவுக்கு நன்றாக வளர வைக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செடியின் அருகில் இருக்கும் மண்ணை கிளறி விட வேண்டும்.
தற்போது செடி வளர்ந்த பிறகு அதற்கு தேவையான சூரிய ஒளியும் தண்ணீரும் தேவைப்படும்.
செடி வளர்வதற்கு சாம்பலை உரமாக கொடுக்கலாம். அதன்பிறகு செடியை பூச்சி தாக்காமல் இருப்பதற்கு மஞ்சள் கலந்த தண்ணீரை செடியின் மேல் கொஞ்சம், கொஞ்சமாக தெளித்துக் கொள்ள வேண்டும். வேர்களுக்கு ஊற்றி விட வேண்டாம்.
தக்காளி செடி படர்ந்து வளரும் செடி என்பதால் இதன் அருகில் சிறிது தக்காளி செடிகளுக்கு நடுவில் கம்பு நட்டு வைத்து அதனை மேல்நோக்கி வளர செய்ய வேண்டும்.
மேலும் பூண்டு நசுக்கி கொதிக்க வைத்த தண்ணீரை சூடு ஆறிய பின் தக்காளி செடிகளின் மீது தெளித்தால் பூச்சிகள் வருவது தடுக்கப்படும்.
புளிச்ச மாவு அல்லது புளித்த மோர் சிறிதளவு நீர் சேர்த்து அதனை தக்காளி செடிகளின் மேல் தெளித்து விட்டால் பூக்கள் உதிராமல் இருக்கும். இதனால் காய் நிறையாக காய்த்து நிறைய மகசூல் கொடுக்கும்.
மேலும் படிக்க: Rose Plant Growing Tips in Tamil: உங்கள் தோட்டத்தில் ரோஜாப்பூ கொத்து கொத்தாக வளர அதை ட்ரை பண்ணுங்க..!